Search This Blog

Monday, 16 December 2013

இந்த வார இராசி பலன்கள் | (16.12.2013 – 22.12.2013)

இந்த வார இராசி பலன்கள் | (16.12.2013 – 22.12.2013)

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்
16.12.2013 – 22.12.2013



மேஷ இராசி அன்பர்களே...
உங்களின் நீண்ட நாள் முயற்சி பலன் தரக்கூடிய வாரமாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். இல்லத்தில் சுபநிகழ்சிகள் நடக்கும். . புண்ணிய ஸ்தலங்களுக்கு போகக் கூடிய வாய்ப்பு வரும். நண்பர்களுக்கிடையே மனகசப்புகள் தோன்றலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர். சொத்துக்கள் விஷயத்தில் கவனத்துடன் இருங்கள். கடன் பிரச்சினை தீரும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

ரிஷப இராசி அன்பர்களே…
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நபர்களால் சில பிரச்சனைகள் உருவாகும். அரசாங்க உதவிகள், அரசு பணிகள் போன்றவை கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையேழுத்து போட வேண்டாம். தொழில்துறையில் புதிய சிக்கல் தோன்றலாம். ஸ்தலயாத்திரை செல்லும் வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் தேடி வருவார்கள். வழக்கில் இருந்த இழுப்பறி நிலை நீங்கும். முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். சிவபெருமானை வணங்குங்கள்.

மிதுன இராசி அன்பர்களே…
பண வரவு இந்த வாரம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் கூட வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. அவசரம், பரபரப்பு வேண்டாம். தொழில் மேன்மை பெறும். திருமண யோகம் அமையும். வெளிநாடு பயணங்கள் நல்ல பலனை தரும். தொல்லை தந்த பிணிகள் நீங்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முருகப்பெருமானை வணங்குங்கள்.

கடக இராசி அன்பர்களே…
உடல்நலனில் நல்ல முன்னேற்றம் தெரியும். கொடுக்கல்-வாங்கல் விவகாரங்கள் நல்லவிதமாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் அமையும். தேவையற்ற செலவுகள் வரலாம். உறவினர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பிறரின் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழில் முதலீடுகள் நல்ல பலன் தரும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இந்த வாரம் உண்டு. லஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

சிம்ம இராசி அன்பர்களே…
எதிர்பாராத உதவிகள் கிட்டும். வெளியூர்-வெளிநாடு பயணங்களால் பயன் பெறுவீர்கள். கல்வியில் சற்று மந்த நிலை இருந்தாலும் தடை ஏற்பாடாது. உத்தியோகத்தில் கூடுதல் டென்ஷன் இருக்கும். இருப்பினும் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த ஈகோ பிரச்சனை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் இருக்கும். வருமானம் உயரும். நல்ல வாய்ப்புகள் வரும். அனுமானை வணங்குங்கள்.

கன்னி இராசி அன்பர்களே…
நல்ல உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு திருப்தியான இடத்தில் வேலை அமைய இந்த வாரம் வாய்ப்பு உண்டு. ஆனாலும், அவசர முடிவுகள் தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. மனதில் கூடுதல் உற்சாகம் கிடைக்கும். தியானம்-ஆன்மிகம் போன்ற ஈடுபாடு நல்லது. தேவையற்ற அலைச்சல்களை தந்தாலும் ஆதாயமும் பெறுவீர்கள். பல நாட்களாக விற்க முடியாமல் போன சொத்து நல்ல விலைக்கு விற்பனை ஆக வாய்ப்புண்டு. விநாயகரை வணங்குங்கள்.

துலா இராசி அன்பர்களே…
வியபார-உத்தியோகம் ரீதியாக அதிக பணி சுமைகள் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பண வரவு உண்டு. சேமிப்பு இருக்காது. திருமண தடைகள் நீங்கும். இதுவரையில் பலன் தராத மருத்துவ சிகிச்சைகளுக்கு பலன் தெரியும். சமூக அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பை பெறுவீர்கள். வாகனம் வாங்கும் வசதி உண்டு. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் பனிபோல் நீங்கும். அரசாங்க ஆதரவு உண்டு. குலதெய்வத்தை வணங்குங்கள்.

விருச்சிக இராசி அன்பர்களே…
அறிவு திறனுடன் செயல்படுவீர்கள் பொருளாதர நெருக்கடி தோன்றினாலும் திடீர் பண வரவில் நெருக்கடியை சமாளித்து விடுவீர்கள். சொத்து முதலீடுகள் இந்த வாரம் யோகத்தை தரும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்றுமை தோன்றினாலும் பிறகு நீங்கள் சமாதானம் அடைவீர்கள். வெளிநாட்டு பயணம் இருக்கலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தட்டிபோன வாய்ப்புகள் தேடி வரும். கல்வி சிறப்பாக அமையும். பெருமாளை வணங்குங்கள்.

தனுசு இராசி அன்பர்களே…
வருமானம் எதிர்பார்த்தபடி வரும். புதிய வாகனங்கள் வாங்குவதை விட சொந்த வீடு வாங்குவதை பற்றி யோசிப்பது நல்லது. எதிர்பார்த்த புதிய முயற்சிகள் வெற்றியாக அமையும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். வயிற்று தொல்லை தரலாம். கடன் ஒரளவு குறையவும் வாய்ப்பு உண்டு. புதிய நட்புகள் கிடைக்கும். ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.

மகர இராசி அன்பர்களே…
பழைய கடன் தொல்லைகள் தீரும். தொழிலில் சிறப்பான நிலை அமையும். பொருளாதர சிக்கல் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களால் லாபம் பெறுவீர்கள். உடல்நலனில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனை காணப்படும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நற்பலனை தரும். விஷ்ணு பகவானை வணங்குங்கள்.

கும்ப இராசி அன்பர்களே…
அசையும்-அசையா சொத்துக்கள் விவகாரத்தில் லாபம் பெறுவீர்கள். வெளிநாடு தொழில் தொடர்புகள் அமையம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வங்கி தொடர்பான பிரச்சனை தீரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கூடுதல் செலவினங்களை கட்டுப்படுத்துங்கள். சகோதரர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு பெரும் முயற்சிக்கு பின் கிடைக்கும். திருமண பாக்கியம் அமையும். பைரவரை வணங்குங்கள்.

மீன இராசி அன்பர்களே…
சிக்கல்கள் இந்த வாரம் பெரும் அளவில் தீரும். இருப்பினும் வியாபர கணக்குகளில் கவனம் தேவை. உங்கள் சொந்த முயற்சிகளுக்கு பலன் தெரியும். கொடுக்கல் – வாங்கலில் இருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விரோதிகள் விலகுவார்கள். . உயர் கல்வி தடைபட்டவர்களுக்கு கல்வி தொடர வாய்ப்புகள் ஏற்படும். சமுதாயத்தில் நற்பெயர் கிட்டும். உடலில் மந்தநிலை காணப்படும். தடைப்பட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். உத்தியோக பொறுப்புகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

No comments:

Post a Comment