பச்சை வண்ணர்-பவள வண்ணர் திருக்கோயில்கள்
பெரிய காஞ்சிபுரம், கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர், பவள வண்ணர் திருக்கோயில்கள் அமைந்திருக்கின்றன. மரீசி என்னும் மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்து மகாவிஷ்ணு, ராமராக, பச்சை நிற மேனியராக காட்சி தந்த தலம் இது. பச்சை வண்ணர் கோயிலுக்கு எதிரே பவள வண்ணர் ஆலயமும் அமைந்துள்ளது. இருவரையும் ஒருசேர தரிசித்தால் அரிய பலன்கள் கிடைக்கும்.
பெண்ணாக முருகன்
முருகனைப் பெண்ணாக அலங்கரித்து அபிஷேக ஆராதனை நடத்தும் கோயிலைப் பார்த்திருக்கிறீர்களா? செவ்வாய்க்கிழமை தோறும் கோவை மாவட்டத்திலுள்ள சிரவணபுரம் சீரவை கிராமத்தில், முருகனுக்குப் பட்டுப்புடவை கட்டி, அழகாக அலங்கரித்து பூஜை வழிபாடு நடத்துவார் அர்ச்சகர். அன்று முருகனை தரிசிக்க பெண் பக்தர்கள் அதிகமாகக் குழுமுவார்கள்.
அதிசய ஆஞ்சநேயர்
பத்மாசன திருக்கோலத்தில் இருகரங்களையும் குவித்து தவம் புரியும் 41 அடி உயர பிரமாண்டமான அனுமனின் சிலை மதுரை முத்தப்ப நாராயணசாமி ஆலயத்தில் உள்ளது. இவர் முன் நின்று ராம நாமத்தை ஒரு முறை கூறினால் நூற்றியெட்டு முறை அவரை வலம் வந்து கும்பிட்டதற்குச் சமம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment