கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்
இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் நல்வாழ்த்துக்கள். காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் நாள்! எனவே காந்தி ஜெயந்தியை கொண்டாடும் பொது காந்திக்கு தான் கொண்டாடுகிறோம் அதே நாளில் பிறந்த குப்பனுக்கு அல்ல! அதேபோல் கிறிஸ்துமஸ் என்பது சூர்ய கடவுளுக்கான பெயரல்ல அது இயேசு பிறப்பின் தினத்தை நினைவு கூறுவது! அகவே அதே நாளில் ஆயிரம் பண்டிகைகள் வந்தாலும், கிறிஸ்துமஸ் என்னும் பெயர் கிறிஸ்து பிறந்த விழாவை தான் குறிக்கிறது! எனவே அருமை நண்பர்களே, பலபேர் பலவாறு பேசட்டும் , நம் இருதயத்தைசீர்தூக்கி பார்த்து ஏழை கோலம் பூண்ட நம் இறைவனுக்கு செலுத்தும் உண்மை பலியை இந்நன்னாளில் செய்வோம்! எல்லா கிறிஸ்துமஸ் விழாவிலும் இறைவனையும் திரித்துவ தேவனையும் மகிமை படுத்தும் விதமாக அமைப்போம்! சாத்தானுக்கு இடம் கொடாமல் உண்மையாய் இறைவனை சேவிப்போம்! உலகில் உள்ள பெரும் பாலான ஜனம் கிறிஸ்த்து பிறப்பு என்பது இறைவன் இயேசுவை முன்னிறுத்தி ஜெபிக்கும் பொது! ஒரு சில சாத்தானின் தூதுவர்கள், கிறிஸ்த்தவர்களை திசை திருப்பும் உக்தியில் மும்முரமாய் இரங்கி இருக்கிறார்கள், இந்நிலமை தொடர்ந்ததால் - டிசம்பர் மாதத்தில் இயேசு பிறப்பை மாற்றி அப்பெயரை எடுக்க முற்படுகிறார்கள். இயேசு பெருமானை நினைத்து கொண்டாடும் இப்பெரும் விழா – இப்போது சாத்தானுக்கு மிகவும் தொந்தரவாக இருப்பதால் – அவிழாவை அழிக்க முற்படுகிறான்.
நான் கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டங்களை, உலக பிரகாரமாக கொண்டாட சொல்லவில்லை மாறாக ஆவிக்குரிய பிள்ளைகளாகிய நாம் அத்தருணத்தை சரியாக பயன் படுத்தி இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்த நோக்கத்தை புற ஜாதியாருக்கு சொல்லுவோம். உங்கள் மேலேயே நீங்களே சேறு பூசும் நிலைமயை மாற்றுவோம். இறைவனுக்காக நல்ல செய்திகளை எடுத்து செல்வோம்! உங்கள் அனைவருக்கும் கிறிஸ்த்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள். ஆமென்
No comments:
Post a Comment