சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடப்பதன் கருத்து என்ன?
சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்திற்குரிய நட்சத்திரத்தில் ஒவ்வொரு வகையான அபிஷேகம் செய்ய வேண்டும் என 'மாச பூஜா விதி படலம்' என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அனேகமாக பவுர்ணமியும் சேர்ந்தே வரும். ஓரிரு நாட்கள் முன் பின்னாகவும் வரலாம். வைத்தீஸ்வரன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில் போன்றவற்றில் 12 மாத அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பருவமழை பொழிந்தால்தான் பயிர்கள் செழித்து உணவுப்பொருள் கிடைக்கும். இதனை வேண்டியே சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment