Search This Blog

Thursday, 5 December 2013

மாத ராசிபலன் – 2013, மார்கழி 1 முதல் 31 வரை.

மாத ராசிபலன் – 2013, மார்கழி 1 முதல் 31 வரை.

மேஷம்
மேஷம்: மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங் கிகளே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு கண்டகச் சனி நடைபெறுவதாலும், ராசியிலேயே கேது நிற்பதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும்.
கடந்த ஒரு மாதகாலமாக 8ம் வீட்டில் மறைந்திருந்த சூரியன் இப்போது 9ம் வீ ட்டில் நுழைந்து உங்களின் பாக்யாதிபதியான குருவின் பார்வையைப் பெற்றிருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரன் 10ம் வீட்டில் நிற்பதால் குடும்பத் தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும். மனைவிக்குத் தெரியாமல் எந்தக் காரியத்திலும் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் மனைவியிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். ஆனால், மனைவி வழிகளுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். தலைமையை பகைத்துக் கொள்ள £தீர்கள். மாணவர்களே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும் விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப்போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 3ம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அதிக கடன் வாங்கி பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் போக்கு உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் பணம் வரும். ராசிக்கு 10ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் உத்யோகத் தில் வேலைச்சுமை அதிகமாகும். எவ்வளவுதான் வேலை பார்த்தாலும் அதற்கான பாராட்டுகளோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போகும். புது அதிகாரி வந்து சேருவார். அவர் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள். இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கலைத்துறையினரே! பழைய நண்பர்களால் பலனடைவீர்கள். விவசாயிகளே! அண்டை நிலத்தாருடன் அனுசரித்துப் போங்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 19, 27, 28 ஜனவரி 3, 4, 5, 6, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 29ந் தேதி காலை 9 மணி முதல் 30 மற்றும் 31ந் தேதி மதியம் 1 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சென்னை – சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்திலுள்ள நீல சரஸ்வதியையும், பிரத்யங்கரா தேவியையும் தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவியை செய்யுங்கள்.
______________
ரிஷபம்
ரிஷபம்: ஐந்தில் வளைந்தால்தான் ஐம்பதிலும் வளைய முடியும் என்பதை அறிந்த நீங்கள், பக்கத்தில் இருப் பவர்களை விட பத்து விரல்களை அதிகம் நம்பு வீர்கள். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே சனியும், ராகுவும் நிற்பதால் கடின மான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். தடைகளெல்லாம் நீங்கும். தன்னம்பிக்கை பெருகும். உங்கள் ராசிக்கு 8ல் சூரியனும், புதனும் நிற்பதால் அறிஞர்களின் நட்பு கிடைக்கும். மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்களுடைய ஆலோசனை களையும் ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.
மகளுக்கு வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மகனுக்கு இருந்து வந்த முன்கோபம் நீங்கும். என்றாலும் 5ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பாகப்பிரிவினை விஷயத் தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 9ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும்.
எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன் மையான முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல் வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டிப் பூசல்கள் மறையும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்த்து ரசிக்க வேண்டுமென்று நினைத்திருந்த ஊர்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
உயர்கல்வி மீதிருந்த ஆர்வமில்லாப் போக்கு மாறும்.வியாபாரத்தில் இந்த மாதம் கணிசமாக லாபம் உயரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. உணவு, மருந்து, கட்டிட வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.சிலருக்கு இடமாற்றம் சாதகமாகும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். பரிசு, பாராட்டு களும் உண்டு.விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் தீரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 19, 20, 21, 23, 27, 28, 30 ஜனவரி 5, 6, 7, 8, 10.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 31ந் தேதி மதியம் 1 மணி முதல் ஜனவரி 1 மற்றும் 2ந் தேதி மாலை 3 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இரு ப்பது நல்லது.
பரிகாரம்: தஞ்சாவூர், திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடியில் அருளும் வேதபுரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.
_________________
மிதுனம்
மிதுனம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், வெறுப்பு விருப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகி அரவ ணைத்துச் செல்லக் கூடிய வர்கள். உங்கள் ராசி நாதனான புதன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால், சூரியன் 7ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது வீண் சந்தேகத்தால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்தாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
ஜென்ம குரு தொடர்வதால் மனதிலே ஒரு பற்றற்ற போக்கு உருவாகும். உங்களுடைய சுகஸ்தானமான 4ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில காரியங்கள் தடைபட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலையையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். உடன்பிறந் தவர்களாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். பழைய வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரையும் வழக்கில் மாற்ற வேண்டியது வரும். குறுக்கு வழியில் எந்த முயற்சியும் வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தொகு தியிலே செல்வாக்கு கூடும். கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நண்பர்களிடமிருந்து விடுபடு வீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.காதல் விவகாரத்தில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கூடும். பழைய வாடிக்கையாளர்களை போராடி தக்கவைத்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகளையும் இதமாகப் பேசி வசூலிப்பது நல்லது.புது பங்குதாரர்களை அவசரப்பட்டு சேர்க்க வேண்டாம். கமிஷன் வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும்.
மேலதிகாரியுடன் மோதிக் கொண்டிருக்காதீர்கள்.உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினரே! நகைச்சுவை படைப்புகள் மூலமாக பிரபலமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம் பக்க நிலத்தாருடன் வாய்த் தகராறு, வரப்புத் தகராறுகளை தவிர்ப்பது நல்லது. பழைய சிக்கல்கள் தீருவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 20, 21, 22, 23, 24, 29, 30 ஜனவரி 7, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 2ந் தேதி மாலை 3 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மாலை 6 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: வேலூர் மாவட்டம் ஆரணிக்கு அருகேயுள்ள படவேடு ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமண த்திற்கு உதவுங்கள்.
__________________
கடகம்
கடகம்: அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் திறமை படைத்த நீங்கள், கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களுடைய ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகும் இளமையும் கூடும். மனை விவழியில் உதவிகள் கிட்டும் என்றாலும் சப்தமாதிபதியான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் மனைவிக்கு அவ்வப்போது கால் மற்றும் முதுகுவலி வந்து நீங்கும். குரு 12ல் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும். கூடுதல் தளம் கட்டுவது, கூடுதல் அறை கட்டுவது போன்ற கட்டு மானப் பணிகள் நல்ல விதத்தில் முடிவடையும். சனியும், ராகுவும் 4ம் வீட்டில் நீடிப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் சிக்கலாகி நல்ல விதத்தில் முடிவடையும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெ டுக்கப்படுவீர்கள்.
தொகுதி மக்களிடம் புகழடைவீர்கள். மாணவர்களே! இந்த மாதத்தின் முற்பகுதியில் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பொது அறிவுத்திறன் கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சிலர் புது வேலையில் சென்று அமர்வீர்கள்.
வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். புதிதாக முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும், ஷிப்பிங் வகைகளாலும் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள்.
ஒருசிலர் கடையை மெயின் ரோட்டிற்கு இடம் பார்த்து மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அனுபவமிக்க வேலையாட்கள் வந்தமர்வார்கள். 10ல் கேது தொடர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.என்றாலும் மூத்த அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். சிலருக்கு சாதகமான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சம்பளம் கூடும், புது சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! மாற்றுப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். டிராக்டர் போன்ற சாதனம் வாங்க உதவிகள் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 23, 24, 25, 26, ஜனவரி 1, 2, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 4ந் தேதி மாலை 6 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
பரிகாரம்: கோவைக்கு அருகேயுள்ள மருதமலை முருகனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
_____________________
சிம்மம்
சிம்மம்: ஊராரின் தூற்றுதல் களுக்கு செவி சாய்க் காது வாழ்வின் உயரத்தை நோக்கி செல்லும் குண முடைய நீங்கள், தடைகளை படிக்கட்டுகளாக நினைத்து பயணிப்பவர்கள். உங்களின் பூர்வ புண்யாதி பதியான குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 2ம் வீட்டில் நிற்பதால் காரசாரமாகப் பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள்.
பார்வைக் கோளாறு வரக்கூடும். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் 6ம் வீட்டில் தொடர்வதால் கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 5ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். ஆனால், சூரியனை குரு பார்ப்பதால் மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகக் கையாளுங்கள். சனியும், ராகுவும் 3ம் வீட் டில் தொடர்வதால் எத்தனை பிரச்னைகள், சிக்கல்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்ளீகொண்டு வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். அரசியல் வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசாதீர்கள். வழக்குகளை சந்திக்க நேரிடும். கோஷ்டிப் பூசலால் உங்கள் புகழ் குறையும். மாணவர்களே! அறிவியல், கணிதப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முயற்சியும் வேண்டாம். நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. கல்யாண முயற்சிகள் தடைபடும்.
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களுடன் சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது. உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பணப் பட்டுவாடா செய்ய வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது. அதிகாரிகளுடன் வீண் விவாதங்க ளெல்லாம் வேண்டாம். சக ஊழியர்களுக்காக அதிகம் பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப்போகும். கிசுகிசுத் தொல்லைகளும் வரும். சக கலைஞர்களுக்குள் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.விவசாயிகளே! பழைய கடனை நினைத்து கலங்காதீர்கள். பூச்சித் தொல்லை குறையும். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 19, 27, 28, 29 ஜனவரி 2, 3, 4, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்: சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் பைரவரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
_____________________
கன்னி
கன்னி: எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித் தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளை உள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதி பதியான சுக்கிரன் 5ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க அமர்ந்திரு ப்பதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். வருங்காலம் குறித்த பயமும் விலகும். குழந்தை பாக்யம் உண்டாகும். உங்களுடைய ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிப்பீர்கள்.
மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் மு ன்கோபம் அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும்.சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண் வலி, சின்னச் சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.பாதச்சனி நடைபெறுவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாகும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால் புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை இழந்து விடாதீர்கள்.
சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைபட்ட கட்டுமானப் பணிகள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்களே! டி.வி., சினிமாவையெல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். கன்னிப் பெ ண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.
வியாபாரத்தில் கடையை விரிவு படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மூலமாக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரர்களும் வருவார்கள். கமிஷன், புரோக்கரேஜ், கிரானைட், மொசைக், டைல்ஸ் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு காணப்படும். மூத்த அதிகாரிகளின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பீர்கள். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 10ல் குரு தொடர்வதால் சின்னச் சின்ன பழிகள் வரக்கூடும். உங்கள் கடின உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த வேலைகள் உடனடியாக முடிவடையும். உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட் டப்படுவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும், பூச்சித் தொல்லை குறையும். ஊரிலே புதுப் பொறுப்புகள் வரும். சமயோஜித புத்தியாலும், கடந்த கால அனுபவங்களாலும் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 18, 19, 20, 21, 28, 30, 31 ஜனவரி 1, 5, 7, 8.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 9, 10 மற்றும் 11ந் தேதி காலை 9.30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை சனிக்கிழமையன்று தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.
______________________
துலாம்
துலாம்: துல்லியமாகவும், துணி வாகவும் முடிவெடுக்கும் நீங்கள், வரம்பு மீறி பேசுவதை விரும்ப மாட்டீர்கள். பத்து ரூபாயை பையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருளை விலைபேசு மளவிற்கு சாதுர்யமானவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்து கொண்டு உங்களை ஏடாகூடமாகப் பேச வைத்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் நிற்பதால் இனி உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பாதகாதிபதியான சூரியன் 3ல் மறைவதால் திடீர் பணவரவு உண்டு. பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தை வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்து சேரும். ஆனால், உங்கள் ராசிக்கு 12ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். ஏழரைச் சனி நடை
பெறுவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மீண்டும் பழைய பிரச்னை களை சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும். குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிரு ப்பதால் தன்னம்பிக்கை உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள், அரசியல் முக்கியப் புள்ளிகள் அறிமுகமாவார்கள். அரசியல்வாதிகளே! அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள்.பழைய வழக்கு களிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்த் தவர்கள் அடங்குவார்கள். மாணவர்களே! வகுப்பறையில் அரட்டைப் பேச்சு வேண்டாம். விளையாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். படிப்பில் கூ டுதல் கவனம் செலுத்துங்கள்.
கன்னிப் பெண்களே! உங்களுடைய ராசிநாதனான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான முடிவுகளை எடு ப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பெற்றோரின் அறிவுரையில் உண்மையி ருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். உணவு, டெக்ஸ்டைல், ஹார்டுவேர் வகைகளாலும் லாபம் வரும்.
பழைய பாக்கிகளை சாமர்த்தியமாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட் களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களிடம் முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். இடமாற்றம் சாதகமாகும். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் கூடிவரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாகும். அரசியல்வாதிகளால் ஆதாய மடைவீர்கள். விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மகசூல் பெருகும். கோயில் விழாக் களை முன்னின்று நடத்துவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 20, 21, 22, 23, 30, 31 ஜனவரி 1, 2, 3, 4, 7, 8, 10.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 16, 17ந் தேதி நண்பகல் 12 மணி வரை மற்றும் ஜனவரி 11ந் தேதி காலை 9.30 மணி முதல் 12, 13ந் தேதி இரவு 7 மணி வரை எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
____________________
விருச்சிகம்
விருச்சிகம்: பணம், பரிசு தந்தாலோ, பாராட்டி சீராட்டிப் பேசினாலோ பணியாத நீங்கள், பாசத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப் படுவீர்கள். மண்ணாக இருந் தாலும், பொன்னாக இருந் தாலும் வாரி பூசிக் கொள்ளாமல் தூரத்தில் வைத்து அழகு பார்ப்பீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது ராசியை விட்டு விலகியிருப்பதால் வயிற்று வலி, முதுகு வலி விலகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சுக்கிரன் 3ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போவது நல்லது.
ஆனால், விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதுடன் குருவுக்கு 4ம் வீட்டில் அமர்ந்து குரு மங்கல யோகத்துடன் அமர்ந்திருப்பதால் உங்களுடைய செல்வாக்கு கூடும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 8ம் வீட்டில் மறைந்திரு ப்பதாலும், ஏழரைச் சனி நடைபெறுவதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும். அரசியல்வாதிகளே! பேச்சிலே கவனம் தேவை. எதிர்க்கட்சியினரை அத்துமீறி தாக்கிப் பேச வேண்டாம். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது. மாணவர்களே! நண்பர்களின் ஆதரவு பெருகும்.
கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். விளையாட்டிலும் பதக்கம் வெல்வீர்கள். சக மாணவர்கள் மத் தியில் மதிப்பு கூடும். வகுப்பாசிரியரின் பாராட்டும் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க தவறாதீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர் களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் மனங் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். கெமிக்கல், மருந்து, உணவு, பெயின்ட் வகைகளால் லாபம் கூடும். உத்யோ கத் தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் செல்வாக்கு கூடும்.
வேலைச்சுமையும் குறையும். இடமாற்றமும் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சம்பள பாக்கியும் கைக்கு வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியா வதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகைமை நீங்கும். வருமானம் உய ரும். கறாராகப் பேசி விட்டதைப் பிடிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 23, 24, 25, 26 ஜனவரி 1, 3, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 17ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 18, 19 மற்றும் ஜனவரி 13ந் தேதி இரவு 7 மணி முதல் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்: மதுரை கள்ளழகரை தரிசித்து வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.
_____________________
தனுசு
தனுசு: கோபுரமாக உயர வேண்டு மென்றால் அஸ்திவாரமாய் அடங்கினால்தான் முடியு மென்பதை அறிந்த நீங்கள், சில நேரங்களில் சிலரிடம் வணங்கா முடியாய் நிற் பீர்கள். சுக்கிரன் உங்களு டைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே நிற்பதால் சமயோஜி தமாகவும், இங்கிதமாகவும் பேசி பல முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆனாலும் சுக்கிரன் உங்களுடைய 6ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். 12ம் வீட்டில் கடந்த ஒருமாத காலமாக அமர்ந்திருந்து உங்களுடைய தூக்கத்தை குறைத்த சூரியன் இப்போது உங்கள் ராசியிலேயே நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி வரக்கூடும்.
அதிக உஷ்ணத்தால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி உங்களுடைய புதுத் திட்டங்களுக்கு பக்கபலமாக இரு ப்பார். உங்களுடைய ராசிநாதனான குரு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப் பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். யோகாதிபதிகளான குருவும், செவ்வாயும் பரஸ்பரம் கேந்திர பலம் பெற்று குருமங்கல யோகத்தோடு இருப்பதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். உங்களின் அறிவுப்பூர்வமான, சாதூர்யமான பேச்சைக் கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள்.
பெரிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். மாணவர்களே! நினைவாற்றல் கூடும். படிப்பில் முன்னேறுவீர்கள். வகுப்பாசிரியர், சக மாணவர்கள் மத் தியில் மதிக்கப்படுவீர்கள். விளையாட்டு, கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதிய திட் டங்கள் நிறைவேறும். முன்கோபம் குறையும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சனியும், ராகுவும் லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் லாபம் பெருகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வேலையாட்கள் உங்களுடைய அருமையைப் புரிந்து கொள் வார்கள்.
கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல், லெதர் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்பும், பதவியும் தேடி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படும். விமர்சனங் களையும் தாண்டி மு ன்னேறுவீர்கள். பெரிய வாய்ப்புகளும் கூடி வரும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தன்னிச்சையான முடிவுகளாலும், விரைந்து செயல்படுவதாலும் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 26, 27, 28 ஜனவரி 3, 4, 5, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 20, 21 மற்றும் 22ந் தேதி காலை 11 மணி வரை வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
பரிகாரம்: உங்கள் வீட்டிற்கோ அல்லது ஊருக்கு அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர்களுக்கு செருப்பும், கம்பளிப் போர்வையும் வாங்கிக் கொடுங்கள்.
__________________
மகரம்
மகரம்: மதியாதார் முற்றம் மிதிக்காத நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள். உண்மையை உயிர்க் காற்றாய் சுவாசிப் பவர்கள். 6ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களை அவ்வப் போது அலைகழித்துக் கொண்டுதான் இருக்கிறார். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும், த டுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். தந்தை வழியில் உதவிகள் உண்டு.
தந்தையாருக்கு இருந்து வந்த நோய் நீங்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் ஒருபக்கம் செலவினங்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். 4ம் வீட்டிலேயே கேது தொடர்வதால் தாயாருக்கு கழுத்து, காது மற்றும் முதுகு வலி வந்துபோகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்றிருந் தாலும் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் திறமைகள் குறைந்துவிட்டதாக நினைப்பீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும். மாணவர்களே! படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அலர்ஜி, இன்பெக்ஷன் குறையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்கும் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கும் பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். இரும்பு, கட்டிடம், உணவு, மருந்து, ஆடை வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். தலைமையுடன் மோதல் வரும். ஒருதலைப் பட்சமாக மூத்த அதிகாரி நடந்து கொள்கிறார் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும்.
அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகும். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தப் பாருங்கள். நவீனரக உரங்களை பயன்படுத்தி மகசூலை பெருக்குவீர்கள். தடைகளும், மனஉளைச்சலும் குறைந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 18, 19, 20, 21, 28, 29, 30, 31 ஜனவரி 5, 7, 8, 10.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 22ந் தேதி காலை 11 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷே கங்களுக்கு இயன்றளவு உதவுங்கள்.
________________
கும்பம்
கும்பம்: வெகு தொலைவி லிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலைகொண்ட நீங்கள், நல்லவர் யார் கெ ட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்த வர்கள். 5ம் வீட்டிலேயே குருபகவான் அமர்ந்திருப்பதால் எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். 8ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுகூர்ந்து பேசாதீர்கள். அதன்மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். சகோதர வகையில் சச்சரவு வரும். உங்கள் மீது யாருக்கும் உண்மையான பாசம் இல்லையென்று ஆதங்கப்படுவீர்கள்.
சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் மனஉளைச்சல்களும், உடல் நலக்குறைவும் வந்து நீங்கும். தூக்கமில்லாமல் போகும். உடல் உஷ்ணம் அதிகமாகும். சி ன்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். உங்களின் பிரபலயோ காதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. புதுவேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கோஷ்டிப் பூசல் விலகும். மாணவர்களே! மதிப்பெண் கூடும். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்யாணத் தடைகள் நீங்கும். திருமணமும் கூடி வரும். வியாபாரம் தழைக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பழைய பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். புது பங்குதாரரும் அறிமுகமாவார். புதிதாக முதலீடு செய்யலாம். ஏற்றுமதி-இறக்குமதி, ஷிப்பிங், கண்ஸ்ட்ரக்ஷன் வகைகளால் பணம் வரும். உத்யோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சம்பளப்பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 20, 21, 22, 23, 30, 31 ஜனவரி 1, 8, 9, 10, 11
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் திட்டமிட்டவை தாமதமாகி முடியும்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு இயன்றளவு உதவுங்கள்.
_________________
மீனம்
மீனம்: எதையும் சிறப்பாக செய்ய விரும்பும் உங்களின் கண்களில் மற்றவர்களின் குற்றம், குறைகள்தான் முதலில் தென்படும். அழுக்கை தின்று தண் ணீரை சுத்தப்படுத்தும் மீனைப் போல் பிறர் நலம் பேணுவதில் வல்லவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு சேமிப்புகளையெல்லாம் கரைத்துக் கொண்டு, முன்கோபத்தையும், பிரச்னைகளையும் தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் நீங்கும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மனைவியும் ஆதரவாக இருப்பார். உங்களுடைய தன பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப் பார்கள். ஆனால், உங்கள் ராசியை செவ்வாய் பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டெ ன்ஷன் இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.
2ம் வீட்டில் கேது நிற்பதால் பேசும்போது கவனமாக இருங்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். பார்வைக் கோள £று வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. சோப்பு, ஷாம்பூ மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். அரசியல் வாதிகளே! புதிய பொறுப்புகள் தேடி வரும். தலைமை உங்களை அழைத்துப் பேசும். தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும். மாணவர்களே! ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணங் களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். புதுவேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள், அழகுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். துரித உணவகம், தேங்காய் மண்டி, ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். வேலையாட்களால் அவ்வப்போது அலைகழிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் பிரச்னை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். செல்வாக்கு கூடும். சிலருக்கு புது வாய்ப்புகளும் வரும். வெளிநாட்டில், அண்டைமாநிலத்தில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. கலைத்து றையினரே! உங்களுடைய புதிய படைப்புகள் பாராட்டி பேசப்படும். விவசாயிகளே! நவீன யுக்திகளை கையாண்டு லாபமடைவீர்கள். அதிரடி தி ட்டங்கள் நிறைவேறுவதுடன் அந்தஸ்தும் ஒருபடி அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 18, 19, 23, 24, 25, 26 ஜனவரி 1, 3, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 27, 28 மற்றும் 29ந் தேதி காலை 9 மணி வரை பேச்சால் பிரச்னைகள் வந்து நீங்கும்.
பரிகாரம்: நெல்லை மாவட்டம், நவதிருப்பதியுள் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாளை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செல வுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment