எத்தனை எத்தனை விநாயகர்கள்!
அர்ச்சாவதாரமாக புராண விநாயகர்கள்
ஜெயங்கொண்டான் அருகில் உள்ள வைரவனீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சி தந்தவர். இராவணனிடம் குட்டுப் பெற்ற விநாயகர் திருக்கோகர்ணம் கோயிலில் உள்ளார். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் அருணகிரிநாதர் வழிபட்ட விநாயகர் இருக்கிறார். பாபநாசம் அருகில் உள்ள திருக்கருவாய்க் கரைப்புத்தூரில் இருக்கும் விநாயகர் கும்ப கர்ணனை தண்டித்தவர்.
எத்தனை விநாயகர்கள்!
நவரத்தினம் - மாணிக்க விநாயகர், இரத்தின விநாயகர்.
நவகிரகம் - சூரிய விநாயகர், சந்திர விநாயகர்.
அஷ்டலட்சுமி - தனலட்சுமி விநாயகர், தான்யலட்சுமி விநாயகர்.
வண்ணம் - வெள்ளை விநாயகர், மஞ்சள் விநாயகர்.
தெய்வம் - விஷ்ணு விநாயகர், பிரம்ம விநாயகர்.
மலர்கள் - செண்பக விநாயகர், பாதிரி விநாயகர்.
திக்குகள் - இந்திர விநாயகர், குபேர விநாயகர்.
பருவங்கள் - பால விநாயகர், விருத்த விநாயகர்.
பஞ்ச பூதங்கள் - பஞ்ச பூத விநாயகர், பிருத்வி விநாயகர்.
ஊர் வலஞ்சுழி விநாயகர், மயூரேச விநாயகர்.
டிரான்ஸ்ஃபர் விநாயகர்
திருப்பூரிலிருந்து கோவை செல்லும் வழியில் உள்ள விநாயகரிடம் பணி இடம் மாறுதல் கேட்டு வேண்டி, அது கிடைப் பதால் அவரை 'டிரான்ஸ்ஃபர் விநாயகர்' என்கிறார்கள்.
மரத்தடி விநாயகர்கள்
ஆத்தி மரத்தடி விநாயகர் - சங்கரன்கோவில்
இலந்தையடி விநாயகர் - கீழ்வேளூர்
புளியமரத்தடி விநாயகர் - சென்னிமலை
ஒண்டிமரத்தடி விநாயகர் - சென்னை-திருவான்மியூர்
ஆலடி விநாயகர் - துடிசை
வன்னிமரத்தடி விநாயகர் - புத்தூர்
மந்தார மரத்தடி விநாயகர் - ஆற்றூர்
மாவடி விநாயகர் - மயிலாடுதுறை
தாலமூல(பனை மரத்தடி)
விநாயகர் திருக்கச்சூர்
பதினொரு விநாயகர்கள்
திருவள்ளூர் அருகில் உள்ள திருப்பாச்சூரில் உள்ள வாகீசுவரர் கோயிலில் மூலவருக்கு முன்னால் விநாயகர் திருச்சபை உள்ளது. இச்சபையில் வலம்புரி விநாயகர் நடுநாயகமாக வீற்றிருக்க, பத்து விநாயகர்கள் இவருக்கு இடது புறத்திலும், முன்னரும் வீற்றருள்கின்றனர். பதினொரு விநாயகர்களும் வீற்றருளும் இந்த இடம் ‘விநாயகர் சபை’ என அழைக்கப்படுகிறது.
தங்க கணபதி
சேலம் முதல் அக்ரஹாரம் அருகில் ராஜ கணபதி கோயில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று முழுவதும் ராஜ கணபதிக்கு தங்கக் கவசம் அணிவித்து தங்க கணபதியாக ஜொலிக்க வைக்கின்றனர். இவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.
பெண்கள் வழிபடாத விநாயகர்
திரியம்பக் என்ற இடத்தில் கணபதி கோமணதாரியாக இருக்கிறார். இவரைப் பெண்கள் தரிசிக்க அனுமதிக்கப் படுவதில்லை.
யானை வாகனம்
திருச்செந்தூரில் உள்ள கோயிலில் விநாயகர் யானை வாகனத்தில் விளங்குகிறார்.
கோரிக்கை
மும்பையில் உள்ள விநாயகர் ஆலயங்களில் ஒரு விசேஷ நடைமுறை உள்ளது. நம் ஊரில் நந்தியின் காதில் பிரதோஷம் அன்று நமது கோரிக்கையை சொல்வதுபோல, மும்பைக்காரர்கள் விநாயகரின் முன் உள்ள மூஞ்சுறின் ஒரு காதைப் பொத்தி மற்றொரு காதில் கோரிக்கை தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment