Search This Blog

Friday, 1 November 2013

தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி!

தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி!

திருப்பதியைப் போல காசியிலும் லட்டு விசேஷம். இஙகுள்ள பழமையான அன்னபூரணி அம்மன் கோயிலில் அம்பாள் விக்ரகம் சொக்கத் தங்கத்தால் ஆனது. இவளை தீபாவளி நாளில் மட்டுமே சந்நிதிக்கதவைத் திறந்து முழுமையாகத் தரிசிக்க முடியும். வருடத்தின் மற்ற நாட்களில் கதவின் துவாரம் வழியாக மட்டுமே தரிசிக்கலாம். தீபாவளியன்றும் அதனைத் தொடர்ந்து மறுநாளும் இந்த சந்நிதி இனிப்புவகைகளால் நிரப்பப்படும். வழிபாட்டிற்குப் பின்னர் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருவர். தீபாவளிநாளில் லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அன்னபூரணி வலம் வருவாள்.

No comments:

Post a Comment