Search This Blog

Friday, 22 November 2013

சாம்பிராணி பற்றி ஒரு சிறு தகவல்

சாம்பிராணி பற்றி ஒரு சிறு தகவல்

சாம்பிராணி ஒரு வகை மரத்தின் பிசின்லிருந்து தாயாரிக்கப்படுகிறது. இந்த மரத்தின் பெயரும் சாம்பிராணி மரம் என்று அழைக்கப்படுகிறது மேலும் இதை குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் நன்கு வளரக்கூடியவை இதன் உயரம் சராசரி 500 மீட்டர் முதல் 700 மீட்டர் வரை வளரக்கூடியதாம் இது கடினமான மரம் என்றாலும் எளிதாக அறுக்கவும் இழைக்கவும் முடியுமாம்.
 
இந்த மரத்தின் பட்டைகளில் துளையிட்டு அந்த துளையிலிருந்து பால் வடியுமாம் இந்த பால் காற்றில் உலர்ந்து இறுகி ஒரு பிசின் போல் ஆகிவிடுமாம். இது நறுமணம் கொண்ட எண்ணெய் சத்தை உள்ளடக்கியதாம். இதுவே நாம் பயன்படுத்தும் சாம்பிராணியாகும். இது நல்ல ஒரு பூச்சுக்கொல்லியாக இருக்கிறது. இதனாலேயை நம்முன்னோர்கள் வீட்டில் பூச்சிகளை விரட்ட சாம்பிராணி புகையை போடும் பழக்கத்தை நமக்கு பக்தி மார்கம் வழியாக அளித்து சென்றுள்ளனர்.இந்த மரங்களிலிருந்து தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
பூச்சி கொல்லியாகவும் மணமும்மிக்க இந்த சாம்பிராணி பெயரை சொல்லி போடா சாம்பிராணி என்று திட்டினால் ஏன் அனைவருக்கும் கோபம் வருகிறது? இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

No comments:

Post a Comment