Search This Blog

Monday, 21 October 2013

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் இன்று துவக்கம்!

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் இன்று துவக்கம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம், இன்று துவங்கி, ஒன்பது நாள் நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம், இன்று துவங்கி, ஒன்பது நாட்கள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை, ஆறு மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபம் எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார்.ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, இன்று இரவு, 7.15 மணிக்கு, நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருள்கிறார். இதையொட்டி பகல், ஒரு மணி முதல், மாலை, ஆறு மணி வரை, மூலஸ்தான ஸேவை கிடையாது. அதேபோல், நாளை, இரண்டாம் நாள் முதல், ஆறாம் நாள் வரை, நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். ஏழாம் நாள், உபநாச்சியார்களுடன் நம்பெருமாள், மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருள்கிறார்.ஊஞ்சல் உற்சவ விழா நிறைவு நாளான, ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில், நம்பெருமாள் சந்திரபுஷ்கரணயில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

No comments:

Post a Comment