Search This Blog

Friday, 6 September 2013

நாசரேத்தூர் இயேசு (Jesus of Nazareth)

நாசரேத்தூர் இயேசு
Jesus of Nazareth

இத்தாலியில் ரவென்னா நகரின் பசிலிக்கா பேராலயத்தில் உள்ள
இயேசு கிறிஸ்துவின் ஓவியம்.

கலை: பதிப்புக்கல் பாணி.

காலம்: 6ஆம் நூற்றாண்டு.

பிறப்புகி.மு. சுமார் 4ஆம் ஆண்டு.
பெத்லகேம், உரோமைப் பேரரசு; நாசரேத்து, கலிலேயா.

இறப்புகி.பி. சுமார் 30ஆம் ஆண்டு.
கல்வாரி மலை, யூதேயா, பாலசுதீனம்.

இறப்பிற்கான
காரணம்சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்.
நினைவிடம்சாவுக்குப்பின் உயிர்பெற்றெழுந்தார்.

இனம்யூதர்

பெற்றோர்தாய்: மரியாள்

வளர்ப்புத் தந்தை: யோசேப்பு

இயேசு (ஏசு, Jesus, கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30) கிறிஸ்தவ சமயத்தின் மைய நபரும், கிறிஸ்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். இவர் இயேசு கிறிஸ்து, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற தமிழ்ப் பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததாகவும், அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர்.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, இசுலாம் மற்றும் பஃகாய் போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு முக்கியமான இறைத்தூதராகக் கருதுகின்றன. இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.

No comments:

Post a Comment