Search This Blog

Friday, 27 September 2013

அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்

அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்
 
மூலவர் : லலிதா பரமேஸ்வரி
 
உற்சவர் : -
 
அம்மன்/தாயார் : -
 
தல விருட்சம் : -
 
தீர்த்தம் : -
 
ஆகமம்/பூஜை : -
 
பழமை : 500 வருடங்களுக்குள்
 
புராண பெயர் : -
 
ஊர் : மாடம்பாக்கம்
 
மாவட்டம் : சென்னை
 
மாநிலம் : தமிழ்நாடு
 

பாடியவர்கள்:
     
  -  
     
 
திருவிழா:
     
  பங்குனி மாதம், பவுர்ணமி, அமாவாசை  
     
 
தல சிறப்பு:
     
  18 சித்தர்கள் ஒரே தலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     

திறக்கும் நேரம்:
     
  காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     

முகவரி:
     
  அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில் மாடம்பாக்கம் சென்னை.  
     
போன்:
     
  +91 91 44 2493 8734, 98840 57317   

பொது தகவல்:
     
  இங்கு ஒரே  பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சந்நிதி உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட  கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு,  நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு,  பிருந்தா சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளது.  நவக்கிரகங்களுக்கு சந்நிதி கிடையாது.  18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி,  நவக்கிரகங்களின் சக்திகளையும், செயல் பாடுகளையும் ஏற்று அருள்பாலித்து  வருவதால் இவ்வாறு செய்துள்ளனர்.இங்கு பசுமடம் உள்ளது.  
     

பிரார்த்தனை
     
  அனைத்து செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  
     
நேர்த்திக்கடன்:
     
  சித்தர்களுக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.  
       
தலபெருமை:
     
 
               கோயில்களில் குறிப்பிட்ட ஒரு சித்தரை  மட்டும் வேண்டுமானால் தரிசிக்கலாம். ஆனால், இங்கு பாம்பாட்டி  சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய்  சித்தர், கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர்,  சட்டைமுனி, புலிப்பாணி,  காகபுஜண்டர், போகர் ஆகிய  பதினெட்டு சித்தர்களையும்  ஒரு சேர தரிசிக்கலாம். எல்லா சித்தர்களுக்கும் அற்புதமான சிலை உண்டு. இவர்களைத்  தரிசித்தால், வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று நம்  சித்தம் (மனம்) தெளிவடையும்.

          தினமும் அன்னதானம் உண்டு. இலவச மருத்துவமுகாம், முதியோர்களுக்கு ஆடைதானம் போன்ற சமூக நல திட்டங்களும் நடக்கிறது. திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துகின்றனர். அவர்களே நேரிடையாக பூஜையும் செய்யலாம்.
   
 
தல வரலாறு:
     
  சேஷாத்திரி சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஜோதிடர் கே.வி.எல்.என். சர்மாவின் ஆலோசனைப்படி  இக்கோயில் எழுப்பப்பட்டது. இங்கு ஸ்ரீ சக்ரநாயகி லலிதா  பரமேஸ்வரி அம்பாள் பிரதானமாக இருக்கிறாள். எனவே இதை லலிதா பரமேஸ்வரி கோயில் என்றும் கூறுகின்றனர்.  

சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 18 சித்தர்கள் ஒரே தலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
 

No comments:

Post a Comment