அல்லாஹ்வின் கருணையின் உச்சம் எந்த உயிரையும் அதன் சக்திக்கு மீறி நாம் சோதிப்பதில்லை
அல்லாஹ்வின் வசனம் இது. நமக்கு உண்டாகும் சிக்கல், வேதனை, கடன் தொல்லை, உடல் நலம் பாதிப்பது என எதுவாக இருந்தாலும் நொடிப்பொழுதில் கஷ்டங்களை கண்டு உடைந்து போகிறோம். கடவுள் எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை தருகிறான் என புலம்புகிறோம். காலம் கடந்து, திரும்பி பார்க்கும்போது நம்மை கடந்து சென்ற அந்த கஷ்டம் ஏதேனும் ஒரு படிப்பினையை கொடுத்து விட்டு சென்றிருக்கும். அத்துடன் அந்த சோதனையை பற்றி சிந்தித்தால், ‘நல்ல வேளை இந்த அளவுடன் நமது கஷ்டம் முடிந்தது. இப்படி நடந்திருந்தால் என்ன ஆகிய¤ருக்கும்’ என யோசிப்போம். அப்போது அந்த சோதனையின் பிற விளைவுகள் நம் கண் முன் நிழலாடிவிட்டு செல்லும். கடவுளுக்கு மனம் இறுகி நன்றி சொல்வோம். அதைத்தான் அல்லாஹ் சொல்கிறான், அவர்களின் சக்திக்கு மீறி எந்த உயிரையும் நாம் சோதிப்பதில்லை என்று.
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவனது அருள் மனிதர்கள் மீது இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மனிதன் அதை நினைத்துப் பார்ப்பதில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு பத்திரமாக சென்றடைவதும் அவனது கண்காணிப்பாலே நடக்கிறது. தினந்தோறும் மூன்று வேளை உணவு கிடைப்பதும் அவனது அருட்கொடைதான். தும்மலின்போது ஒரு நொடி நிற்கும் இதய துடிப்பும் மூச்சும் திரும்ப நம் உடலுக்குள் வந்தடைவதும் அவன் செயல்தான். அதனால்தான் தும்மல் வந்ததும்
அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே) என மீண்டும் இதயத்தை சீராக இயக்கி, சுவாசிக்க வைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
அல்லாஹ்வை வணங்கும் முறையில் தொழுகை, நோன்பு, ஜகாத் உள¢ளிட்ட விஷயங்கள் உள்ளடங்கும். இவை எல்லாம் மனிதனுக்கு கடினமானதாகவும் கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்ததாகவும் ஆக்கப்பட்டுள்ளதாக நினைக்கலாம். ஆனால் இதனால் கிடைக்கப்போகும் பயன்கள் நம்மால் நினைத்தும் பார்க்க முடியாததாக இருக்கும். அதற்கான உத்தரவாதத்தை அல்லாஹ் வழங்குகிறான். வாகனத்தை கூட கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டினால் என்ன ஆகும்? விபத்தில்தான் போய் முடியும். இந்த வாழ்க்கையை நமக்கு வழங்கி, நம்மை சோதிப்பதற்காக இறைவன் இங்கு அனுப்பியிருக்கும்போது கட்டுப்பாடுகள் விதிக்காமல் போனால் அது ஒழுக்கமான வாழ்க்கையாக அமையுமா?
சாப்பிடும் முறை, தண்ணீர் அருந்துவது, உடை அணிவது என சிறு சிறு விஷயங¢கள் தொடங்கி பணம் சம்பாதிக்கும் முறை, உறவுகளை பேணுவது உள்பட உலக விஷயங்கள் எல்லாவற்றையும் எப்படி செயல்படுத்த வேண்டும் என தெளிவாக மார்க்கத்தில் கூறப்பட்டு விட்டது. குர்ஆனில் எல்லா சந்தேகங¢களுக்கும் தனது வசனங்களால் அல்லாஹ் விளக்கமும் தருகிறான். மது அருந்துவது, விபசாரத்தில் ஈடுபடுவது, வட்டி வாங்குவது, கொடுப்பது, சூதாட்டம் இவையெல்லாம் ஹராம் (விலக்கப்பட்டது) என தெளிவாக்க¤யிருக்கிறான். ஆண்கள் எந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதிலிருந்து ஏ டூ இசட் வழிமுறைகள் வகுத்து கொடுத்துவிட்டான். இதையெல்லாவற்றையும் பின்பற்றுபவர்களே வெற்றியாளர்கள் என்றும் அல்லாஹ் பிரகடனப்படுத்துகிறான். அவன் வகுத்த வழிகளிலிருந்து தடம் புரளும்போதுதான் அவனது கருணை பார்வை நம்மை விட¢டு விலகத் தொடங்குகிறது. ஆனால் அதுவே அவனது நல்லடியானாக நாம் மாறும்போது சிறு சம்பாத்தியத்திலும் அவன் அபிவிருத்தி செய்வான். ஏழ்மையிலும் அவன் நிம்மதியை கொடுப்பான்.
அல்லாஹ் தன் அடியானை நேர்வழிப்படுத்த அதிகம் சிரத்தை கொடுப்பதாக நினைப்பவர்கள், அவனது மென்மைத்தனம் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். மனிதர்கள் எல்லோரும் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். உங்களில் சிறந்தவர், அந்த பாவங்களுக்காக மனம் வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்கிறவர்தான் என சொல்லும் அல்லாஹ், சிறு சிறு பாவங்களிலிருந்து நீங்கள் மீள தர்மம் அதிகம் செய்யுங்கள் என்று தீர்வும் சொல்கிறான். தர்மம் என்பது அவரவர் வசதிக்கு ஏற்ற அளவுக்கு செய்தால் போதும். பாதையில் கிடக்கும் முள், கற்கள் பிறர்க்கு துன்பம் தரக்கூடாது என தூரம் தள்ளிவிடுவது கூட தர்மம்தான் என வழிமுறைகளை லேசாக்கி தந்திருக்கிறான். அதேபோல் தான் காட்டிய எல்லா நல் வழியையும் பின்பற்றும் தனது அடியானுக்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. அதை அவன் நமக்கு
உணர்த்தும்போதுதான் அல்லாஹ்வின் கருணையின் உச்சம் நமக்கு புரியும்.
அகில உலகத்தையும் அதில் உள்ள மனித இனம் முதல் சிறு தாவரங்கள் வரை படைத்த உங்கள் இறைவனுக்கே புகழ் அனைத்தும்; அல்லாஹ் ஞானம் மிக்கவன்; அவன் 7 வானம் கடந்து தனது அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான் என்றெல்லாம் அவனது ஆளுமையை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயம், அவனது அரியாசனம் கூட ஒரு கட்டத்தில் நிலை குலையும் என அல்லாஹ்வே சொல்கிறான். அது எப்போது?... எந்த பாவமும் அறியாத எனது நல்லடியான் மீது வீண் பழி சுமத்தப்படும்போது, அவன் இதயம் அழுதால் எனது அரியாசனம் நிலை குலையும். அவனுக்கு நியாயம் பெற்றுத் தரும் வரையில் எனக்கு நிம்மதி கிடைக்காது என்கிறான் அல்லாஹ். இதுதான் அவனது கருணையின் உச்சம்.
No comments:
Post a Comment