Search This Blog

Saturday, 31 August 2013

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

* பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.

* நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும்.

*பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.

* ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

* பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.

* இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்குத் திறந்து விடுகின்றான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவனை இறைவன் திடீரென்று வேதனையைக் கொண்டு பிடிப்பான்.

* எந்தத் தலைவன் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.

* உமது நெருங்கிய நண்பரிடம் பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்.

No comments:

Post a Comment