Search This Blog

Friday 18 April 2014

தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்

தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!

ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் அவதரித்தார். இங்கு திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இவர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரம் மிகவும் புகழ்பெற்றது. ஆதிசங்கரர், அன்றாடம் பிட்சை எடுத்து உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க ஏழை பிராமணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று, பவதி பிக்ஷõம் தேஹி என்று அழைத்தார்.வீட்டிலிருந்த அயாசகனின் மனைவி, தானம் கொடுக்க எதுவும் இல்லாததால், தன்னிடமிருந்த ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிøக்ஷ இட்டாள். இந்தக் கருணைச் செயல், சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில் அக்குடும்பத்தின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி துதித்தார். இவர் 19வது ஸ்லோகத்தை பாடி முடித்த போது, அந்த ஏழை பெண்ணின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.

 இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில், மே 2 காலை 9 மணிக்கு எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோயில் யாக மண்டபத்தில் கனகதாரா யாகம் நடக்கும். தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள், 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் விற்பனை செய்யப்படும்.
  

No comments:

Post a Comment