Search This Blog

Wednesday, 1 January 2014

திருமண தடை நீக்கும் கன்னியம்மன்

திருமண தடை நீக்கும் கன்னியம்மன்

வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவில் நட்சத்திர கன்னியம்மன் கோயில் உள்ளது. சுமார் 100 வருட பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் மூலவர் சிலையை பார்த்தவாறு பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சிலையை ஒட்டி ஏழு கன்னியர் சிலை உள்ளது. வலப்புறம் விநாயகர் சிலையும், இடப்புறம் கன்னிகளின் காவல் தெய்வமான வேங்கை சிலையும் உள்ளது. பின்புறம் அரசமரமும், வேப்பமரமும் உள்ளது. வேப்பமரத்தின் அடியில் நாகர் சிலை உள்ளது. அரசமரத்தின் தண்டுப்பகுதியில் விநாயகரின் தும்பிக்கை போல் அமைந்துள்ளது. இதை சுயம்பு அரச விநாயகராக வழிபடுகிறார்கள்.  

இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தின் 3வது வாரம் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் முழுக்க தனுர் மாத பூஜை நடக்கிறது. இது தவிர மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.  கன்னியம்மனை மனமுருக வேண்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறினால் புடவை சார்த்தியும், சந்தனக்காப்பு அலங்காரம் செய்துஷ்ம் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.  எப்படி போகணும்: வடபழனி முருகன் கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment