Search This Blog

Wednesday, 4 September 2013

பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுகாசம்ஹார நிகழ்ச்சி!

பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுகாசம்ஹார நிகழ்ச்சி!

பிள்ளையார்பட்டி: சிவகங்கை, பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று, கஜமுகாசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோவிலில், சதுர்த்தி விழா, ஆக., 31ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, விநாயகர் வெள்ளி கேடகம், மூஷிக வாகன புறப்பாடும், இரவு, திருவீதி உலாவும் நடைபெறும். இன்று, கஜமுகாசம்ஹாரத்தை முன்னிட்டு, மாலை, 6:00 மணிக்கு, கோவில் முன், யானை முகத்தோற்றத்தில் எழுந்தருளும் சூரனை, கற்பக விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். செப்., 8ல் காலை, சுவாமி தேருக்கு எழுந்தருள்வார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டமும், 4:30 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், செப்., 9ல், தீர்த்தவாரியும், இரவு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும்.

No comments:

Post a Comment