Search This Blog

Wednesday, 28 August 2013

இஸ்லாம் யார் அந்த ஏழு பேர்?

இஸ்லாம்
யார் அந்த ஏழு பேர்?

வாழும் காலத்தில் நமக்கு நிழல் தர மரம் உதவும். சில நண்பர்களும், சில <உறவினர்களும் உதவுவார்கள். ஆனால், இந்த நிழல் கடைசி வரை கிடைக்கும் என்பதற்கும் <உத்தரவாதம் கிடையாது.
மரம் சாய்ந்து விடலாம், மனிதர்கள் மனம் மாறி விடலாம். ஆனால், மறுமைநாளில் இறைவனின் நிழல் மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.
""இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமைநாளில், இறைவன் ஏழு வகையினருக்கு தன்னுடைய நிழலைத் தருகின்றான்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
யார் அவர்கள்?
1. நீதிநெறி காக்கும் தலைவர்.
2. இறை வழிபாட்டில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட வாலிபன்.
3. இதயத்தால் பள்ளிவாசல் தொடர்பு கொண்டவர்.
4. மார்க்க விஷயத்தில் ஒன்றுபட்டு செயல்படும் இருவர்.
5.தனிமையிலிருந்து இறைவனை எண்ணி கண்ணீர் வடிப்பவன்.
6. இறைவனுக்கு அஞ்சி அழகிய பெண்ணின் அழைப்பை விட்டு விலகிச் செல்பவன்.
7. வலதுகரம் கொடுப்பதை இடதுகரம் தெரியாமல் தர்மம் கொடுப்பவர்.
நாம் இதில் ஏதாவது ஒன்றைக் கைக்கொண்டிருந்தாலும், இறைவனின் நிழலில் இளைப்பாறுவோம்.

No comments:

Post a Comment