Search This Blog

Tuesday 17 December 2013

தில்லை அம்பலத்தானே நடராஜா..கோஷத்துடன் சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் கோலாகலம்!

தில்லை அம்பலத்தானே நடராஜா..கோஷத்துடன் சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் கோலாகலம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆரூத்ரா தேரோட்டத்தில் பல்லாயிரகனக்கான பக்தர்கள் தில்லை அம்பலத்தானே, ஆனந்த நடராஜரே என கோஷம் எழுப்பியவாறு வடம் பிடித்து இழுத்தனர். நடராஜர் சுவாமி தேர் காலை 11 மணிக்கு நிலைக்கு வந்து நின்றது. பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சுவாமி-அம்பாளுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைப்பெற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிறப்பு வாகனத்தில் வீதி உலா காட்சி நடக்கிறது.

தேரோட்டத்தையொட்டி காலை சிற்சபையில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு யாத்திரா தானம் சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜர் சுவாமி, சிவகாமசுந்தரி அம்பாள் புறப்பாடு செய்து இரண்டு பிரகாரம் வலம் வந்து யாகசாலை முன்பு மண்டக படியை ஏற்றுக்கொண்டு மங்கல வாத்தியங்கள், தேவார இன்னிசையுடன் தேரில் காலை 7.45 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தேரில் நடராஜ சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 8.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் தில்லை அம்பலத்தானே, ஆனந்த நடராஜரே என கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டம் நடந்தது.

பழுதடைந்த நிலையில் இருந்த நடராஜர் திருத்தேரை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பொதுப்பணித்துறையினருக்கு முழு திருப்தி இல்லாததால், சுவாமி தேரோட்டம் துவங்கிய பின்னர் வேறு எங்கும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்தாமல் சீரான வேகத்தில் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் படி வலிமைத் தன்மை தகுதி சான்று வழங்கினர். அதனால் நடராஜர், சிவகமாசுந்தரி தேரோட்டம் 8.30 மணிக்கு துவங்கி நான்கு ரத வீதிகள் வலம் வந்து 11 மணிக்கு தேர் கீழ சன்னதிக்கு நிலைக்கு வந்து நின்றது. பின்னர் தேரில் சுவாமிக்கு சிறப்பு பூனைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு தேரில் இருந்து இறங்கி ஆனந்த நடனம் ஆடியவாறு 12.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமிக்கு கட்டளைதாரர்கள் மாலை, பட்டு மற்றும் தங்க காசு வைத்து தீபாராதனைகள் வழிப்பாடுகள் நடத்தப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தில் முதல் முறையாக காலை 11 மணிக்கு நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், வெளியூர் பக்தர்கள் வீதிகளில் தேரோட்டம் பார்த்து சுவாமி தரிசனம் செய்ய முடியாமல்

No comments:

Post a Comment